செய்திகள்

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் ட்விட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள்

Published On 2018-02-06 20:21 IST   |   Update On 2018-02-06 20:21:00 IST
புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடி ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பணியாற்றி வருகிறார். தனது செயல்பாடுகள், பல்வேறு விவகாரங்களில் தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். மேலும், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் பொது மக்களுக்கு தொடர்பான தகவல்கள், வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் அவ்வபோது பதிவு செய்வார்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவரது ட்விட்டர் கணக்கை 11 லட்சம் பேர் பின் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், இன்று அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் தனது ட்விட்டர் பக்கத்தை முடக்கி உள்ளதாக வாட்ஸ்அப் மூலம் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

Similar News