செய்திகள்

வீட்டை காலி செய்ய கூறிய பெண்ணுக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது

Published On 2018-05-15 14:55 IST   |   Update On 2018-05-15 14:55:00 IST
நந்தம்பாக்கம் பரங்கிமலை ஏழுகிணறு பகுதியில் வீட்டை காலி செய்ய கூறிய பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

நந்தம்பாக்கம் பரங்கிமலை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் கமலா (50). அவருக்கு சொந்தமான வீட்டை சுந்தர் (35) என்பவருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார்.

பெயிண்டர் வேலை செய்து வரும் சுந்தர் தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்துள்ளார்.

இதனால் வீட்டை காலி செய்யும்படி கமலா கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வீட்டை காலி செய்ய முடியாது என்று கமலாவிடம் தகராறு செய்தார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது திடீரென சுந்தர் கத்தியால் கமலாவை கையில் வெட்டினார். அவரது வலது கையில் வெட்டு விழுந்தது.

இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். #Tamilnews
Tags:    

Similar News