செய்திகள்

கலெக்டர் உத்தரவை மதிக்காத திருவாடானை யூனியன் அதிகாரிகள்

Published On 2018-06-05 15:34 IST   |   Update On 2018-06-05 15:34:00 IST
திருவாடானையில் யூனியன் அலுவலக அதிகாரிகள் மாவட்ட கலெக்டரின் உத்தரவை செயல்படுத்தாமல் உள்ளனர்.
தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பஸ் நிலையத்தில் பஞ்சாயத்து யூனியன் சார்பில் புதிதாக குளிர்ச்சி குடிநீர் தரும் எந்திரம் அமைக்கப்பட்டு அதற்கு மின் சப்ளை கொடுக்காமல் பல மாதங்களாக இருந்து வந்தது.

திருவாடானை தாலுகா அலுவலக்தில் நடந்த ஜமா பந்திக்கு வந்த கலெக்டரிடம் இதுகுறித்து முறையிட்ட போது யூனியன் அலுவலக அதிகாரிகளை நேரில் அழைத்து “ஒருவாரத்தில் சரிசெய்துவிட்டு தகவல் சொல்லுங்கள்” என்று உத்தரவிட்டார்.

ஆனால் பத்து நாட்களுக்கு மேலாகியும் இதுநாள்வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர் உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இனி அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News