செய்திகள்

மரக்காணம் அருகே வியாபாரி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-09-01 09:56 GMT   |   Update On 2018-09-01 09:56 GMT
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வயிற்று வலி காரணமாக வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மரக்காணம்:

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கிளாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55). பொம்மை வியாபாரி. இந்த நிலையில் நேற்று மாலையில் அவர் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இரவில் தண்டபாணி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் தண்டபாணிக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவருக்கு நோய் குணமாகவில்லை.

இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த தண்டபாணி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News