செய்திகள்
திருமங்கலம் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவர் லாரி மோதி பலியானர்.
மதுரை:
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள சின்னஉலகானியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் அருண்குமார் (22). இவர் கப்பலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று நண்பர்கள் ராம்குமார் (19), காளிமுத்து (18) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் அருண்குமார் பாரைபத்தியில் இருந்து திருமங்கலத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நெடுங்குளம் பகுதியில் சென்றபோது எதிரே ஜல்லி ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அருண்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மற்ற 2 பேரும் பலத்த காயம் அடைந்து திருமங்கலம் அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.