செய்திகள்
சென்னையில் பழுதடைந்த யானைக்கவுனி பாலம் விரைவில் இடிக்கப்படுகிறது
சென்னை வால்டாக்ஸ் ரோடு, பெரியமேடு பகுதிகளை இணைக்கும் யானைக்கவுனி பாலம் பழுதடைந்ததால் இந்த மாதத்துக்குள் இடிக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னை வால்டாக்ஸ் ரோடு, பெரியமேடு பகுதிகளை இணைக்கும் விதமான யானைக்கவுனி பாலம் பழுதடைந்த காரணத்தால் கடந்த 2016-ம் ஆண்டில் மூடப்பட்டது. லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
போக்குவரத்து வாகனங்கள் மாற்றுப் பாதையில் பேசின் பிரிட்ஜ் வழியாக திருப்பி விடப்பட்டது.
இரு சக்கர வாகனங்கள் மட்டுமே யானைக்கவுனி பாலம் வழியாக சென்று வந்தன.
யானைக்கவுனி பாலத்தின் கீழே ஏராளமான எக்ஸ்பிரஸ், மின்சார ரெயில்கள் சென்று வருவதாலும் 230 கிலோவாட் மின்சார கேபிள் லைன் செல்வதாலும் இந்த பாலத்தை இடித்து அகற்றுவதற்கு மின்சாரத் துறை, ரெயில்வே துறை ஒப்புதல் பெற காலதாமதம் ஏற்பட்டது. யானைக்கவுனி பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் யானைக்கவுனி பாலத்தை இடித்து அகற்றி அங்கு புதிய பாலம் கட்ட ரெயில்வே துறையும் அதற்கான பணியில் ரெயில்வே மாநநகராட்சி, மின்சாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
யானை கவுனி பாலத்தை இடித்துவிட்டு அங்கு புதிய பாலம் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மின்சாரத்துறையும், மாநகராட்சியும் அனுமதி வழங்கி உள்ளது. பழுதடைந்த யானை கவுனி பாலம் இந்த மாதத்துக்குள் விரைவில் இடிக்கப்பட உள்ளது.
தற்போது உள்ள 50 மீட்டர் நீளம் உள்ள பாலத்துக்கு பதிலாக ரூ.62 கோடி மதிப்பீட்டில் 150 மீட்டர் நீளத்துக்கு புதிய பாலம் கட்டப்பட உள்ளது.
யானைக் கவுனியில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின் அங்கு போக்குவரத்து நெருக்கடி குறையும்.