செய்திகள்
கைது (கோப்பு படம்)

திருமங்கலம் அருகே மணல் திருடிய 4 பேர் கைது - லாரி, ஜே.சி.பி. பறிமுதல்

Published On 2019-07-04 17:47 IST   |   Update On 2019-07-04 17:47:00 IST
திருமங்கலம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், டிப்பர் லாரி மற்றும் ஜே.சி.பி.யை பறிமுதல் செய்தனர்.
பேரையூர்:

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையம், ஆலம்பட்டி பகுதிகளில் சிலர் திருட்டுத்தனமாக மணல் எடுப்பதாக மாவட்ட தனிப்பிரிவுக்கு புகார் வந்தன. இதன் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி, கடந்த சில நாட்களாக மணல் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட டிப்பர் லாரி கள் மற்றும் ஜே.சி. ள.யை பறிமுதல் செய்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில், தனிப்பிரிவினர்டிற நேற்றும் சோதனையில் இறங்கினர். அப்போது மணல் எடுத்து வந்த டிப்பர் லாரி, ஜே.சி.பி. பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலம்பட்டி பாலகிருஷ் ணன், டிரைவர் ஊர்க் காவலன், வினோத்குமார், முத்துராஜா (42) ஆகியோர் மணல் திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Similar News