புதுவை அருகே விவசாயி கொலையில் பெண் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு அருகே தமிழக பகுதியான மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் பிள்ளை. விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சண்முகம் பிள்ளை என்பவருக்கும் நிலம் தொடர்பான வழக்கில் கிருஷ்ணன் பிள்ளைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதற்கிடையே இந்த நிலபிரச்சினை தொடர்பாக கிருஷ்ணன் பிள்ளைக்கும், அப்பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்ற மாட்டு பாஸ்கர் (வயது 40) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டது.
அப்போது மாட்டு பாஸ்கர் மற்றும் அவரது தரப்பினர் கிருஷ்ணன் பிள்ளையை அடித்து கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திண்டிவனம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சுமத்ராதேவி இன்று தீர்ப்பு வழங்கினார்.
இதில் குற்றம் சாட்டப்பட் பாஸ்கர் என்ற மாட்டு பாஸ்கர் மற்றும் அவரது சகோதரர்கள் சரவணன், மோகன சுந்தரம் (33), ஆறுமுகம் (35), மாட்டு பாஸ்கரின் உறவினரான குப்புசாமி மனைவி லட்சுமி (70), மகன் கிருஷ்ணமூர்த்தி (45), செந்தாமரையின் மகன்கள் ஆதிகேசவன், முனுசாமி மற்றும் பச்சை முத்து ஆகிய 9 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி சுமத்ராதேவி தீர்ப்பு அளித்தார்.
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இன்ஸ்பெக்டர் ராஜன் செயல்பட்டார்.