செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே ஆவின் சூப்பர்வைசரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
கிருஷ்ணகிரி அருகே வாய் தகராறில் ஆவின் சூப்பர்வைசரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே உள்ள மோட்டூர் காலணி தெருவை சேர்ந்தவர் மதன் (51). இவர் கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினரான ஆட்டோ டிரைவர் ராஜமாணிக்கம் என்பவருடன் கடந்த மாதம் 14-ம் தேதி வாய்தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த வாய் தகராறில் ராஜமாணிக்கம் மதனை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த மதன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் நேற்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் ராஜமாணிக்கம் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.