செய்திகள்
வேலூர் பாராளுமன்ற தேர்தல்: மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டி இல்லை - கமல்ஹாசன் முடிவு
வேலூர் பாராளுமன்ற தேர்தலை மக்கள் நீதி மய்யம் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
வேலூர் தொகுதியில் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ந்தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் ஆகியோரே மீண்டும் போட்டியிடுகிறார்கள். நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்தது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி மட்டும் வேட்பாளர் அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்தது. புதிதாக கட்சியின் ஆலோசகராக இணைந்த பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி கமல்ஹாசன் இந்த தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக தகவல் வந்தது.
இன்று வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள். தேர்தலை புறக்கணிப்பது குறித்து இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிடுகிறார்.
அந்த அறிக்கை குறித்து கட்சியின் தலைமை நிர்வாகிகள் கூறியதாவது:-
3 மாதங்களுக்கு முன்பு சில காரணங்களால் வேலூர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அந்த தேர்தல் நிறுத்தப்பட்டதற்கான காரணங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் மீண்டும் அதே தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவதால் இந்த தேர்தலும் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம்.
அது மட்டும் அல்லாமல் எங்களது இலக்கான பொது தேர்தலை நோக்கி பயணிக்க சில திட்டமிடல்களில் தீவிரமாக உள்ளோம். எனவே இந்த தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.