செய்திகள்
மாயமான தந்தையை மீட்டு தாருங்கள்- திருவள்ளூர் கலெக்டரிடம் மாணவன் கோரிக்கை மனு
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மாயமான தந்தையை மீட்டு தருமாறு திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரியிடம் 6-ம் வகுப்பு மாணவன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மேலசெம்பேடு கிராமத்தைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவர் நரேந்திர வர்மன். இவர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தான். பின்னர் கலெக்டர் மகேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்தான்.
எனது தந்தை வேணுகோபால் பிரதம மந்திரி கவுசல் யோஜனா திட்டத்தில் இலவச தொழிற்பயிற்சி மையத்தை தாமரைப்பாக்கம் மற்றும் பட்டாபிராம் பகுதியில் நடந்தி வந்தார்.
இதற்காக ரூ.30 லட்சம் வரை வங்கியில் கடன் பெற்றார். 2 ஆண்டுகள் நடத்தி வந்த நிலையில் மத்திய அரசு மேற்கொண்டு உதவி வழங்காமல் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான என் தந்தை வீட்டிற்கே வராமல் எங்கோ சென்றுவிட்டார்.
இதனால் எங்கள் குடும்பத்தினர் கவலையுடன் உள்ளனர். எனவே என் தந்தையை மீட்டு தரவும். கடனில் இருந்து மீளவும் உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.