செய்திகள்
பாசனத்துக்காக மருதாநதி அணை நாளை திறப்பு- எடப்பாடி பழனிசாமி உத்தரவு
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு நாளை (9-ந்தேதி) முதல் 90 நாட்களுக்கு தண்ணீரை திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மருதா நதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண்பெருங்குடி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கை கள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு நாளை (9-ந்தேதி) முதல் 90 நாட்களுக்கு தண்ணீரை திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மருதாநதி அணையிலிருந்து பாசனம் பெறும் 6583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.