செய்திகள்
முக ஸ்டாலின்

மகாராஷ்டிராவில் பாஜக சித்துவிளையாட்டு- மு.க.ஸ்டாலின் கருத்து

Published On 2019-11-23 13:12 IST   |   Update On 2019-11-23 13:13:00 IST
மகாராஷ்டிராவில் பாஜக சித்துவிளையாட்டு என்று மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ள அரசியல் ரீதியான அருவருப்பை, அநாகரிகம் என்பதா, அசிங்கம் என்பதா, எதனோடு ஒப்பிடுவது?

‘ஜனநாயகப் படுகொலை’ என்று சொல்வதுகூடச் சாதாரணமான சொல்லாகிவிடுமோ, நடந்திருப்பதின் கடுமையைக் குறைத்து விட்டதாகி விடுமோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

அரசியல் சட்ட நெறிமுறைகளையே காலில் போட்டு மிதித்துக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு, மாநில ஆளுநரைத் தலையாட்டி பொம்மையாக்கி, குடியரசுத் தலைவர் மாளிகை மூலமாகவும் இறுதியில் மறைமுக மிரட்டல்கள் மூலமாகவும், ஆட்சியில் உட்கார்ந்திருப்பதை என்ன பாணி அரசியல் என்பது? பா.ஜ.க. சித்து விளையாட்டு என்பதா?

இந்திய ஜனநாயகத்தின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இது மாபெரும் வெட்கக் கேடு! மாறாத தலைகுனிவு!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News