இந்தியா

விஐபிகளை கைவிட்டுவிட்டு சாமானிய மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்- பவன் கல்யாண்

Published On 2025-01-10 18:57 IST   |   Update On 2025-01-10 18:57:00 IST
  • துணை முதல்வர் பவன் கல்யாண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
  • திருப்பதி குற்றப்பிரிவு தேவஸ்தான டி.எஸ்.பி. ரமணகுமார், கோசாலை இயக்குனர் ஹரிநாத் ரெட்டி ஆகியோர் சஸ்பெண்டு.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருப்பதி குற்றப்பிரிவு தேவஸ்தான டி.எஸ்.பி. ரமணகுமார், கோசாலை இயக்குனர் ஹரிநாத் ரெட்டி ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

மேலும் போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, தலைமை பாதுகாப்பு விஜிலென்ஸ் அதிகாரி ஸ்ரீதர், ஜே.இ.ஓ கவுதமி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் 6 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் தற்காலிக வேலை வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

மேலும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர், " சாமானிய மக்களின் நடைமுறைகளை கையாளுவதற்கான வழிமுறை இது இல்லை. திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதன் விஐபிக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அணுகுமுறையை கைவிட்டுவிட்டு, சாமானிய பக்தர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும், இதனை தேவஸ்தானத்தின் தலைவருக்கு நான் வேண்டுகோளாக விடுக்கிறேன்" என்றார்.

Tags:    

Similar News