இந்தியா

இந்தியா கூட்டணி சிதறி வருவதாக அதில் உள்ள கட்சிகள் கருதினால் அதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பு: சஞ்சய் ராவத்

Published On 2025-01-10 17:48 IST   |   Update On 2025-01-10 17:48:00 IST
  • கூட்டணி மக்களவை தேர்தலுக்கு மட்டுமே என்றால்...
  • அதன்பின் இந்தியா கூட்டணி இனிமேல் இல்லை என அறிவிக்க வேண்டும்.

2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி தலைமையில் மெகா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ் குமார் ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பாக அதிருப்தி அடைந்து, பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்.

மக்களவை தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சனையில் மம்தா பானர்ஜி கூட்டணியில் இருந்து வெளியேறினார். தற்போது டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிக்கள் எதிர்எதிராக போட்டியிடுகின்றன.

மக்களவை தேர்தலின்போது செயல்பட்டு கொண்டிருந்த இந்தியா கூட்டணி, தற்போது ஆலோசனை கூட்டம் போன்றவற்றை நடத்துவதில்லை.

இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமல் அப்துல்லா, "இந்தியா கூட்டணி மக்களை தேர்தலுக்கு மட்டும்தான் என்றால், அதை முறித்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும். இல்லையெனில் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி சிதறி வருவதாக அதில் உள்ள கட்சிகள் நினைத்தால், அதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பு என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சஞ்சய் ராவத் (உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி.) கூறுகையில் "கூட்டணி மக்களவை தேர்தலுக்கு மட்டுமே என்றால், அதன்பின் இந்தியா கூட்டணி இனிமேல் இல்லை என அறிவிக்க வேண்டும். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அவர்களுடைய சொந்த பாதையை தேர்வு செய்ய முடியும்.

இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலுக்கான அமைக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொருவரையும் ஒன்றாக வைத்துக் கொள்ள காங்கிரஸ் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த கால தவறுகளை சரி செய்ய வேண்டியது நமக்கு அவசியம். இந்திய கூட்டணியை கலைப்பது ஒரு தீவிர நடவடிக்கையாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News