செய்திகள்
திருமங்கலம் அருகே தனியார் மருத்துவமனை மேலாளர் விபத்தில் பலி
திருமங்கலம் அருகே கார் விபத்தில் தனியார் ஆஸ்பத்திரி மேலாளர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
தூத்துக்குடி வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 57). தனியார் ஆஸ்பத்திரியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த குழந்தையை மேல் சிகிச்சைக்காக காரில் மதுரைக்கு சிதம்பரம் அழைத்து வந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி விலக்கு பகுதியில் கார் வந்தபோது அந்த வழியே வந்த மற்றொரு கார் மோதியது.
இந்த விபத்தில் சிதம்பரம் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிதம்பரம் இறந்தார்.
அவரது மனைவி மாரியம்மாள் புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.