செய்திகள்
எல்ஐசியில் கிரெடிட் கார்டு திட்டத்தை நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

எல்ஐசியில் கிரெடிட் கார்டு திட்டம்- நாராயணசாமி தொடங்கி வைத்தார்

Published On 2020-03-02 20:21 IST   |   Update On 2020-03-02 20:21:00 IST
எல்.ஐ.சி. நிறுவனம் மூலம் கிரெடிட் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்- அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

எல்.ஐ.சி. நிறுவனம் மூலம் கிரெடிட் கார்டு வழங்கும் திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது. திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

எல்.ஐ.சி.யில் மக்கள் நம்பிக்கையாக முதலீடு செய்யலாம். உலக அளவில் எல்.ஐ.சி.க்கு மரியாதை உள்ளது. இருப்பினும் முகவர்களின் உழைப்புக்குரிய ஊதியம் வழங்கப்பட வில்லை. எல்.ஐ.சி. கிரெடிட் கார்டு முறை நல்ல திட்டம். இதனை பலரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நல்ல திட்டங்கள் இல்லையென்றால் எல்.ஐ.சி.யின் ரூ.4 லட்சம் கோடி வேறு எங்காவது சென்றுவிடும். புதுவையில் அனைத்து மக்களுக்கும் காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்கு மத்திய அரசு நிதி தராவிட்டாலும் புதுவை அரசு செயல்படுத்தும். 

புதுவையில் சாலை மற்றும் பாலம் மேம்பாட்டு பணிக்காக ரூ.2 ஆயிரத்து 185 கோடிக்கான திட்டத்திற்கு மத்திய மந்திரி ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News