செய்திகள்
மழை

உடுமலையில் இன்று காலை இடி-மின்னலுடன் மழை

Published On 2020-04-21 12:51 IST   |   Update On 2020-04-21 12:51:00 IST
உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடியுடன் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து ஒரு மணி நேரமாக பெய்த இந்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் நடமாடிய மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை முதல் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த இடியுடன் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து ஒரு மணி நேரமாக பெய்த இந்த மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல் கோவை மாவட்டம் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. ஆழியாறில் 21 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏப்ரல் மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வெப்பசலனத்தால் மழை பெய்வதுண்டு. இம்மாதங்களில் வீடுகளில் அடைபட்டிருப்பது பொதுமக்களுக்கு ஒரு பெரிய சாவாலாக இருக்கும் நிலையில் அதிக வெப்பசலனத்தால் மழை பொழிவது அவர்களுக்கு சற்று மகிழ்ச்சியை அளிக்கிறது.

Similar News