செய்திகள்
துப்புரவு பணியாளர்கள்

திருப்பத்தூர் பெருமாபட்டு ஊராட்சியில் தூய்மை காவலர்களுக்கு பாதபூஜை

Published On 2020-04-21 14:52 IST   |   Update On 2020-04-21 14:52:00 IST
திருப்பத்தூர் பெருமாபட்டு ஊராட்சியில் தூய்மை காவலர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பொதுமக்கள் பாதபூஜை நடத்தி, மளிகை மற்றும் காய்கறி தொகுப்பு பையை வழங்கினர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ஒன்றியம் பெருமாபட்டு ஊராட்சியில் தூய்மை காவலர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் பாதபூஜை செய்து அரிசி மற்றும் காய்கறிகளை தொகுப்பு பை ஊர் பொதுமக்கள் சார்பாக வழங்கும் நிகழ்ச்சி பெருமாபட்டு ஊராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

தூய்மை காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் சமூக இடைவெளியுடன் ஊர் நடுவே நிற்க வைத்து ஊர் பொதுமக்கள் அவர்கள் பாதங்களில் மஞ்சள் நீர் ஊற்றி பாதங்களை கழுவி மஞ்சள் குங்குமம் வைத்து பூ போட்டு வணங்கினர்.

பின்னர் அவர்களுக்கு மளிகை மற்றும் காய்கறி தொகுப்பு பையை ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுதா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேசன், விநாயகம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஊர் நாட்டாமை முருக கவுண்டர் ஊர் சின்னதுரை கிராம நிர்வாக அதிகாரி ராஜீவ் காந்தி கலந்து கொண்டனர். ஊர் முழுவதும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. முடிவில் ஊராட்சி செயலாளர் அருள் நன்றி கூறினார்.

Similar News