செய்திகள்
கைது

வண்ணாரப்பேட்டையில் மாணவி குளிப்பதை செல்போனில் படம்பிடித்த வாலிபர் கைது

Published On 2020-04-21 16:58 IST   |   Update On 2020-04-21 16:58:00 IST
வண்ணாரப்பேட்டையில் மாணவி குளிப்பதை செல்போனில் படம்பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாச புரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது வீட்டில் மேற்கூரை இல்லாத குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். இதனை அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தின் மேல் ஏறி நின்படி பழைய வண்ணாரப்பேட்டை 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த உசேன் (27) என்பவர் தனது செல்போனில் படம் பிடித்தார்.

இதனைப்பார்த்த மாணவி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து உசேனை பிடித்து வண்ணாரப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News