செய்திகள்
அமைச்சர் காமராஜ்

அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு- அமைச்சர் காமராஜ் தகவல்

Published On 2020-04-21 18:48 IST   |   Update On 2020-04-21 18:48:00 IST
திருவாரூர் மாவட்டத்தில் அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில், அ.தி.மு.க.வின் சார்பில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை உணவு துறை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகின்ற வேளையில், தமிழக மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரூ.1000 மற்றும் ஏப்ரல் மாத ரேசன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

அதுபோல் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் 91.4 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மே மாத ரேசன் பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படும். அந்த பொருட்கள் வழங்குவதற்கான தேதியினை முதல்வர் விரைவில் அறிவிப்பார். சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவிற்கு அ.தி.மு.க.வின் சேலம் மாவட்ட கழகம் கட்டணம் செலுத்தும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

அதுபோல் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இயங்கும் 5 அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்கப்படும்.

அதற்கான கட்டணத்தை திருவாரூர் மாவட்ட கழகம் செலுத்தும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து குடவாசல், வலங்கைமான் ஒன்றியங்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நலத்திட்ட உதவிகளை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார்.

Similar News