செய்திகள்
ஆடம்பரம் இல்லாத சுப நிகழ்ச்சிகள்- வருமானமின்றி தவிக்கும் அலங்காரம் செய்யும் தொழிலாளர்கள்
ஊரடங்கின் காரணமாக ஆடம்பரம் இன்றி சுப நிகழ்ச்சிகள் இருப்பதால், அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் பலர் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.
திருப்பூர்:
சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வீடு என்றால் அந்த வீடு மற்றும் கல்யாண மண்டபங்கள் பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையில் அலங்காரம் (டெக்கரேசன்) செய்யப்பட்டிருக்கும். இந்த டெக்கரேசன் என்பது அந்தந்த விசேஷம் நடத்துபவர்களின் வசதிக்கு ஏற்ப செய்யப்பட்டிருக்கும். சுப நிகழ்ச்சிகளுக்கு வருகிறவர்கள் ஆண்டுக்கணக்காக தங்களது வீட்டு டெக்கரேசன் மற்றும் உணவு வகையில் போன்றவற்றை குறித்து பேச வேண்டும் என பலரும் எதிர்பார்ப்பார்கள். இதில் கொங்கு மண்டலங்களான கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறும்.
இது குறித்து தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கத்தின் மாநில தலைவர் பிரவின்தாஸ் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் அலங்காரம், பந்தல் அமைப்பது, சமையல் செய்வது, ஒலி மற்றும் ஒளி உள்ளிட்ட தொழில்கள் செய்து வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள். திருமணம், காது குத்து, கோவில் விழாக்கள் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது இந்த தொழிலாளர்களுக்கு ஆர்டர்கள் அதிகமாக இருக்கும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து இவர்கள் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் இயங்காத நிலையில் உள்ளது.
மற்ற தொழில்களை போல இந்த தொழிலும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக அலங்காரம் செய்யும் தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வந்து கொண்டிருக்கிறார்கள். கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணத்தால் சுப நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் ஆடம்பரம் இல்லாமல் செய்யப்படுகிறது.
குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு கொங்கு மண்டலங்களில் தான் சுப நிகழ்ச்சிகள் அனைத்து வெகு விமரிசையாக கொண்டாடப்படும். உணவு முதல் அலங்காரம், ஒலி மற்றும் ஒளி போன்றவை மிகவும் விமரிசையாகவும், அதிக அளவு செலவிலும் இங்குள்ள தொழில்துறையினர் செய்வார்கள். இதனால் இங்குள்ள தொழிலாளர்களுக்கும் வருவாய் கிடைத்து வந்தது. தற்போது தொழில் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் அலங்காரம், பந்தல், ஒலி-ஒளி போன்ற தொழிலாளர்களுக்கு நலவாரியமும் கிடையாது. தற்போது உள்ள சூழலில் அரசின் நிவாரண நிதிக்கு எங்களது சங்கம் சார்பில் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் நிவாரணம் வழங்கியுள்ளோம். இதனை கருத்தில் கொண்டு அரசு எங்களுக்கு உதவ வேண்டும். இந்த தொழில் இயல்பு நிலைக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 6 மாதமாகும். எனவே வாழ்வாதாரம் பாதித்துள்ள அலங்காரம் செய்யும் தொழிலாளர்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டும். உதவித்தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சுப நிகழ்ச்சிகளுக்காக மேடை அலங்காரம், ஒலி-ஒளி அமைத்தல், பந்தல் போடுதல், வாடகை பாத்திர கடை, சமையல் தொழிலாளர்கள், ஒப்பனை கலைஞர்கள் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் இந்த தொழிலை நம்பி இருந்து வருகிறார்கள். இந்த தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களது குடும்பத்தை நடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஊரடங்கின் சுப நிகழ்ச்சிகள் ஆடம்பரம் இல்லாமல் சுலபமாக செய்யப்படுகிறது. மேலும், சில சுப நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொழிலாளர்களுக்கு தொழில் இன்றியும், வருமானம் இன்றியும் தவித்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
தற்போது அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இவ்வாறாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.