செய்திகள்
கலெக்டர் சிவன் அருள்

சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்லக் கூடாது- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2020-04-21 19:49 IST   |   Update On 2020-04-21 19:49:00 IST
சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்லக் கூடாது என்று திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆம்பூர்:

ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பைக் கண்டறியும் ரேபிட் சோதனைக் கருவி மூலம் பரிசோதனைகளை கலெக்டர் சிவன்அருள், எஸ்.பி. விஜயகுமாரும் நேற்று தொடக்கி வைத்தனர்.

இது குறித்து கலெக்டர் சிவன் அருள் கூறியதாவது:-

மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. தடை தளர்த்தப்படமாட்டாது. ஆம்பூருக்கு அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள், இங்கிருந்து செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படாது. சரக்கு வாகனங்களில் பொது மக்களை ஏற்றி வரக்கூடாது. மீறி ஏற்றி வந்தால் போலீஸார் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

ஆம்பூரில் 5 குழுக்கள் மூலம் ரேபிட் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து ரேபிட் சோதனைக் கருவிகள் வரப்பெற்றால் ஆம்பூரைத் தொடர்ந்து மற்ற ஊர்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றார்.

திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சுரேஷ், டிஎஸ்பி சச்சிதானந்தம், நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன், வட்டார மருத்துவ அலுவலர் ராமு, தாசில்தார் செண்பகவல்லி, நகராட்சிப் பொறியாளர் எல்.குமார், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் காமராஜ், மண்டல துணை வட்டாட்சியர் பாரதி, நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் பிரிவித்தா ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News