செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

நல்லம்பாக்கத்தில் நாளை மின்தடை

Published On 2020-06-08 14:24 IST   |   Update On 2020-06-08 14:24:00 IST
நல்லம்பாக்கத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள நல்லம்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கண்டிகை, ரத்தினமங்கலம், கீரப்பாக்கம், பனங்காட்டுபாக்கம், போலீஸ் குடியிருப்பு, நல்லம்பாக்கம் குமிழி, அம்மணம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

இதேபோல பொத்தேரி துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம், கிழக்கு பொத்தேரி, மேற்கு பொத்தேரி (ஒரு பகுதி), சீனிவாசபுரம், டிபன்ஸ் காலனி, தைலாவரம் நரசிம்மன்நகர், வல்லாஞ்சேரி சாமூண்டீஸ்வரி நகர், கோவிந்தராஜபுரம், வள்ளி நகர், கிருஷ்ணாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை மறைமலைநகர் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Similar News