செய்திகள்
சேந்தமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது வழக்கு
சேந்தமங்கலம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள மேதராமாதேவி கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக சேந்தமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் நேற்று அந்த கிராமத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்குள்ள ஒதுக்குப்புற இடத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 36), ரஞ்சித் (27), செல்வம் (33) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார் சூதாடிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.