செய்திகள்
உருளைக்கிழங்கு

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பு

Published On 2020-06-08 18:41 IST   |   Update On 2020-06-08 18:41:00 IST
மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் உள்ள காந்தி மைதானம் நெல்லிதுறை ரோடு எல்.எஸ்.புரம், பழைய நகராட்சி அலுவலக வீதி ஆகிய பகுதிகளில் 70 க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து 6 லோடு, கோலாரில் இருந்து 10 லோடு குஜராத்திலிருந்து 31 லோடு என மொத்தம் 47 ரோடு உருளைக்கிழங்கு விற்பனைக்கு வந்திருந்தது.

மண்டிகளில் நடைபெற்ற ஏலத்தில் ஊட்டி உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.1800 இல் இருந்து ரூ.2400 வரையும் கோலார் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ. 1200லிருந்து ரூ1350 வரையும் குஜராத் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.850 லிருந்து ரூ. 1050 வரையும் விற்பனையானது.

Similar News