செய்திகள்
கொரோனா பரிசோதனை (பழைய படம்)

தமிழகத்தில் இன்று 1,562 பேருக்கு கொரோனா தொற்று: 528 பேர் டிஸ்சார்ஜ்

Published On 2020-06-08 18:46 IST   |   Update On 2020-06-08 18:46:00 IST
தமிழகத்தில் இன்று 1,562 பேர் கொரோனா தொற்றால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 528 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனாவால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எணணிக்கை ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. நேற்று முதன்முறையாக 1500-ஐ தாண்டியது.

இன்றும் 1,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 33,239 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 17,527 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது.

Similar News