செய்திகள்
கொரோனா பரிசோதனை (பழைய படம்)

தமிழகம் முழுவதும் இன்று 14,454 பேருக்கு கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறை அறிக்கை

Published On 2020-06-08 19:15 IST   |   Update On 2020-06-08 19:15:00 IST
தமிழகத்தில் இன்று 14,454 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 1,562 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 33,239 ஆக உயர்ந்துள்ளது. 528 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 14,982 மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 6,07,952 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இன்று 14,454 பேரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதுவரை 5,80,768 பேரிடம் மாரிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இன்று பாதிக்கப்பட்டவர்களில் 941 பேர் ஆண்கள், 621 பேர் பெண்கள், இதுவரை 20,575 ஆண்கள், 12,637 பெண்கள், 17 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 44 அரசு மற்றும் 33 தனியார் என 77 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று 17 பேர் பலியாகினர். இதில் 3 பேர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News