செய்திகள்
தமிழகத்தில் இன்று புதிதாக 3,756 பேருக்கு கொரோனா: 3,051 பேர் டிஸ்சார்ஜ்- 64 பேர் பலி
தமிழகத்தில் இன்று புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று புதிதாக 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 3,051 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 74,167 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேவேளையில் 64 பேர் (21 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்) உயிரிழந்துள்ளனர். மொத்த எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 35,979 மாதிரிகளும், 34,962 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.