செய்திகள்
சஸ்பெண்டு

நிதி முறைகேடு- ஆவின் சங்க தலைவர், துணைத்தலைவர் தகுதி நீக்கம்

Published On 2020-07-23 16:55 IST   |   Update On 2020-07-23 16:55:00 IST
மதுரை ஆவின் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கையாடல் புகார் எழுந்ததையடுத்து தலைவர், துணைத்தலைவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை:

மதுரை ஆவின்  கூட்டுறவு சிக்கன நாணய சங்கமானது தென் மாவட்டங்களில் உள்ள ஆவின் ஊழியர்களுக்கு பல ஆண்டுகளாகக் குறுகிய காலக் கடன் வழங்கி, தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. இந்நிலையில் நிதி ஆதாரத்தை பெருக்கும் வகையில், உறுப்பினர் அல்லாதவர்கள், ஓய்வு பெற்ற அரசு மற்றும் ஆவின் ஊழியர்களிடம் வைப்புத் தொகை பெற்று வந்தது.

கடந்த 3 ஆண்டுகளாக முறையான வரவு-செலவு சமர்ப்பிக்கப்படாமல் நடந்த நிதி கையாடல் மற்றும் முறைகேடு குறித்து தமிழக கூட்டுறவு ஊழியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ரூ.7.92 கோடி முறைகேடு நடந்துள்ளது  காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மதுரை ஆவின்  கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கையாடல் புகாரில் தலைவர், துணைத்தலைவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊழியர்களின் வைப்பு நிதியில் ரூ.7.92 கோடி கையாடல் செய்த புகாரில் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்

Similar News