செய்திகள்
மருத்துவ முகாம்

அக்கரைப்பட்டியில் கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2020-07-23 19:27 IST   |   Update On 2020-07-23 19:27:00 IST
அக்கரைப்பட்டியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வட்டார அரசு மருத்துவமனையின் சார்பில், விழிப்புணர்வு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
சமயபுரம்:

சமயபுரம் அருகே அக்கரைப்பட்டியில் கொரோனாவால் 57 வயது முதியவர் ஒருவர் உயரிழந்தார். இந்தநிலையில் அவர் வேலை பார்த்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வட்டார அரசு மருத்துவமனையின் சார்பில், விழிப்புணர்வு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. 

மருத்துவ அலுவலர் டாக்டர் மதிவாணன் தலைமையில், டாக்டர் ஹரிதாஸ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மூலம் அனைவருக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல, எஸ்.புதூர் பகுதியிலும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

Similar News