செய்திகள்
கைது

ஊக்க மருந்து வைத்திருந்த 2 வங்கி ஊழியர்கள் கைது

Published On 2020-07-23 21:06 IST   |   Update On 2020-07-23 21:06:00 IST
தக்கலை பகுதியில் ஊக்க மருந்து வைத்திருந்த 2 வங்கி ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
பத்மநாபபுரம்:

தக்கலை பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது இரண்டு வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியபோது ராமன்பரம்பு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 25), பாலாஜி (26) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து மற்றும் ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் ஊக்க மருந்தை பயன்படுத்தி வருவதும் உறுதியானது.

இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ஊக்க மருந்துகளை பறிமுதல் செய்தனர். கைதான ராமகிருஷ்ணன் தக்கலை கோர்ட்டு அருகே உள்ள அரசு வங்கியிலும், பாலாஜி கருங்கலில் உள்ள ஒரு வங்கியிலும் நகை மதிப்பீட்டாளர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

Similar News