செய்திகள்
பிரணாப் முகர்ஜி - முக ஸ்டாலின்

பிரணாப் முகர்ஜி உடல்நிலை- மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்

Published On 2020-08-13 12:41 IST   |   Update On 2020-08-13 12:41:00 IST
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
சென்னை:

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் உள்ள ரத்தக்கட்டியை நீக்குவதற்கு ஆபரேசன் நடைபெற்றது. அதன்பின் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வென்டிலெட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே பிரணாப் முகர்ஜி உடல்நலம் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை பற்றி அவரது மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியிடம் தொலைபேசியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

‘மருத்துவர்கள் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், பிரணாப் முகர்ஜி விரைந்து நலம்பெற விரும்புவதாகவும்’ மு.க.ஸ்டாலின் கூறினார்.

Similar News