செய்திகள்
வாடகை செலுத்தாததால் 2 கடைகளுக்கு ‘சீல்’- நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வாடகை செலுத்தாததால் 2 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி- வடுவூர் சாலை காளவாய்க்கரை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் கடைகள் உள்ளன. இங்கு 2 கடைகளை குத்தகைக்கு எடுத்திருந்தவர் அரசாணைப்படி வாடகை உயர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இந்த நிலையில் குத்தகைதாரர் வாடகை தொகையை செலுத்தவில்லை என தெரிகிறது.
இதையடுத்து நகராட்சி ஆணையர் கமலா, சம்பந்தப்பட்ட 2 கடைகளுக்கும் ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார்.
அதன்படி நகராட்சி இளநிலை பொறியாளர் பாஸ்கர், நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர்கள் ஜோதி, கோமதி ஆகியோர் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.