செய்திகள்
கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டபோது எடுத்த படம்.

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர்

Published On 2021-02-05 16:52 IST   |   Update On 2021-02-05 16:52:00 IST
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சமீரன், போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தென்காசி:

கொரோனாவை ஒழிக்கும் வகையில், நாடு முழுவதும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் இருமுறை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அதன்படி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முன்களத்தில் நின்று பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு முதல்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அவர்களுக்கு விரைவில் 2-வது கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையிலும் 971 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதற்கிடையே அரசு அதிகாரிகளுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அரசு அதிகாரிகளுக்கு நேற்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

முதலாவதாக மாவட்ட கலெக்டர் சமீரன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா, மாவட்ட பூச்சியியலாளர் தயாளன், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் ஜெஸ்லின் மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

Similar News