செய்திகள்
ரூ.34 கோடியில் புற்றுநோய் மண்டல மையம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.34 கோடியில் புற்றுநோய் மண்டல மையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெல்லை:
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.34 கோடியில் புற்றுநோய் மண்டல மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது.
சென்னையில் இருந்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புற்றுநோய் மையத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் இருந்த 2 பேர் மீண்டது எப்படி? என்பது பற்றி விளக்கமாக கூறினார்.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார்.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், புற்றுநோய் பிரிவு தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.