செய்திகள்
நாகப்பட்டினம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம் அருகே நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. பிரமுகரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
மேட்டுப்பாளையத்தில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் நபிகள் நாயகத்தை பற்றி அவதூறு பேசிய பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை கண்டித்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் கதிர்நிலவன், மாவட்ட துணை செயலாளர் பேரறிவாளன், நாகூர் நகர செயலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனை கண்டித்தும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.