செய்திகள்
கபிலர்மலை ஒன்றியத்தில் தீவிர வாகன சோதனை
வாகன ஓட்டிகளிடம் கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதித்தனர்.
பரமத்திவேலூர்:
கபிலர்மலை ஒன்றியத்தில் அத்தியாவசிய தேவைகளின்றி பலர் சாலையில் சுற்றித்திரிவதாக புகார்கள் எழுந்தன. இதனை கண்காணிக்க கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முனியப்பன், பாலமுருகன் ஆகியோர் தலைமையில் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் நேற்று ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வாகன ஓட்டிகளிடம் கொரோனா தடுப்பு விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் முககவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதித்தனர்.