செய்திகள்
கொரோனா வைரஸ்

பொத்தனூர் பேரூராட்சிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

Published On 2021-05-16 18:35 IST   |   Update On 2021-05-16 18:35:00 IST
பரமத்தி, பொத்தனூர் பேரூராட்சி பகுதிகளில் சமீப காலமாக பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பரமத்திவேலூர்:

பரமத்தி, பொத்தனூர் பேரூராட்சி பகுதிகளில் சமீப காலமாக பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பேரூராட்சிகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொத்தனூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்தது. பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் ஊழியர்கள் தெரு, தெருவாக சென்று கிருமிநாசினி தெளித்தனர்.

இதேபோல் பரமத்தி பேரூராட்சிக்குட்பட்ட இலங்கை அகதிகள் முகாமில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மருத்துவ முகாம் நடந்தது. அப்போது பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் பரமத்தி அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News