செய்திகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் 78 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 12 பெண்கள் உள்பட மேலும் 78 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 144 ஆனது. அதேநேரம் 176 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 10 ஆக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி 570 பேர் சிகிச்சையில் உள்ளனர்.