செய்திகள்
முத்துச்செல்வி, அனுஸ்ரீ

நெல்லை அருகே கார் மோதி தாய்-மகள் பலி

Published On 2021-06-29 08:37 IST   |   Update On 2021-06-29 08:37:00 IST
விபத்தில் முத்துச்செல்வி, அனுஸ்ரீ ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். எம்பெருமாள், அசோக் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
நெல்லை:

நெல்லை அருகே அலங்காரபேரியை சேர்ந்தவர் எம்பெருமாள் (வயது 30). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முத்துச்செல்வி (27). இவர்களுக்கு அனுஸ்ரீ (4) என்ற மகளும், அசோக் (1) என்ற மகனும் உண்டு.

இந்தநிலையில் அசோக்கிற்கு நேற்றுமுன்தினம் பிறந்த நாள். மகனின் பிறந்தநாளை எம்பெருமாள் தனது குடும்பத்தினருடன் நெல்லை அருகே தென்கலத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் வைத்து கொண்டாடினார். பின்னர் அங்கிருந்து மனைவி, குழந்தைகளுடன் அலங்காரபேரிக்கு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். கங்கைகொண்டான் நான்குவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியில் வேகமாக வந்த கார் ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். முத்துச்செல்வி, அனுஸ்ரீ ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். எம்பெருமாள், அசோக் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.

இந்நிலையில், விபத்து ஏற்படுத்திய காரை உடனடியாக கண்டுபிடித்து, டிரைவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முத்துச்செல்வியின் உறவினர்கள் கங்கை கொண்டான் போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News