செய்திகள்
சாமளாபுரம் குளம் தூர்வாரும் பணியை அமைச்சர் ஆய்வு
குளக்கரைகளை பலப்படுத்த ரூ.3 கோடி மதிப்பிலான பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் மேற்கு ரோட்டரி நீர் மேலாண்மை அறக்கட்டளை மூலம் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பெரியகுளம் மற்றும் பள்ளபாளையம் குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. குளக்கரைகளை பலப்படுத்த ரூ.3 கோடி மதிப்பிலான பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தில் குளங்களின் நடுவே சிறு தீவுகளை அமைத்தல்,குளத்தின் ஓரங்களில் நடைபாதை அமைத்தல்,சிறுவர் பூங்காக்கள் அமைத்தல் பணிகள் நடக்கிறது.
இந்த பணிகளை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மேற்கு ரோட்டரி தலைவர் ரகுபதி, நொய்யல் நீர் மேலாண்மை அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.