செய்திகள்
அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்ட காட்சி.

வங்கியில் பணம் எடுக்க முடியாததால் இறந்த விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு-அமைச்சரிடம் மனு

Published On 2021-06-29 15:14 IST   |   Update On 2021-06-29 15:14:00 IST
மருத்துவ சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாததால் விவசாயி இறந்ததாக கூறப்படுகிறது.
பல்லடம்:

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் தனியார் வங்கியில் தந்தை பெற்ற கடனுக்காக கனகராஜ் என்ற விவசாயியின் சேமிப்பு கணக்கு முடக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் இறந்து போனதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் பல்லடம் வந்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனை கனகராஜின் சகோதரர் நாராயணசாமி, தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவர் என்.எஸ்.பி. வெற்றி, திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் சந்தித்து இறந்துபோன விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி மனு அளித்தனர்.அப்போது திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பத்மநாபன், பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் ஒன்றியகுழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News