செய்திகள்
கைது

கோபியில் மோட்டார்சைக்கிள் திருடிய நபர் கைது

Published On 2021-06-29 15:21 IST   |   Update On 2021-06-29 15:21:00 IST
ஈரோடு மாவட்டம் கோபியில் மோட்டார் சைக்கிள் திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோபி:

கோபி அருகே உள்ள கெட்டிசெவியூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பன் (வயது 50) கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கு முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது ஒருவர் அவருடைய இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றார்.

உடனே சத்தம் போட அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று கையும் களவுமாக அவரை பிடித்து அவரிடம் இருந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் மோட்டார் சைக்கிள் திருடியது குள்ளம் பாளையத்தை சேர்ந்த முருகேசன் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News