செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி போட உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. எனினும் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். கிராமப்புற பகுதிகளிலும் முன்எச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றியப்பகுதிகளில் ஒருநாளைக்கு 2 கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டும். தடுப்பூசி இருப்புகளை பொருத்து தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் அனைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.