செய்திகள்
திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்த காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கடைகள் அடைப்பு

Published On 2021-08-08 13:34 IST   |   Update On 2021-08-08 13:34:00 IST
மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் மாலை 5 மணியுடன் மூடப்படுகின்றன.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. பஜார்கள், மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து வந்தனர். இது தொற்று பரவலுக்கு வழிவகுத்து விடும் என்பதால் கடந்த 5-ந் தேதி முதல் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகைக்கடைகள், காய்கறிக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் மாலை 5 மணியுடன் மூடப்படுகின்றன. 

அதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட்டு வருகின்றன. மேலும் மாநகரில் உள்ள 33 வணிக பகுதிகள் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள வணிக பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை, காய்கறிக்கடைகள் மற்றும் இறைச்சி, கோழி , மீன் விற்பனை கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும்  சனி, ஞாயிற்றுக்கிழமை முழுமையாக இயங்க தடை விதித்து உத்தரவிடப்பட்டது. 

இதையடுத்து நேற்று முக்கிய வீதிகளில் கடைகள் மூடப்பட்ட நிலையில் இன்று 2-வது நாளாகவும் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பஜார் பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Similar News