செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

Published On 2021-08-08 16:19 IST   |   Update On 2021-08-08 16:19:00 IST
பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்:

மோகனூர் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட என்.புதுப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மோகனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது என்.புதுப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள புங்க மரத்தடியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கோபிநாத் (வயது 35), அறிவழகன் (34), அகிலன் (30) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.660 பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News