உள்ளூர் செய்திகள்
காரில் திடீர் தீ விபத்து: 5 பெண்கள் உயிர் தப்பினர்
காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பெண்கள் உயிர் தப்பினர்.
புதுச்சேரி:
புதுவை மடுகரை கிராமத்திலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புத்துப்பட்டு அய்யனார் கோவிலுக்கு ஒரு குடும்பத்தினர் காரில் சென்றனர்.
மூலக்குளம் அருகே சென்றபோது காரில் இருந்து திடீரென புகை வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக்கண்டு காரில் பயணம் செய்த 5 பெண்கள் உடனடியாக வெளியே ஓடி வந்தனர். மேலும் டிரைவரும் காரில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.
அருகிலிருந்த ரெட்டியார் பாளையம் போலீசார் உடனடியாக காரில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 5 பெண்கள் மற்றும் டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இச்சம்பவத்தால் புதுவை-விழுப்புரம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.