உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வாக்காளர் தின விழிப்புணர்வு நோட்டீஸ்கள் - விரைவில் விநியோகம்

Published On 2022-01-20 12:55 IST   |   Update On 2022-01-20 12:55:00 IST
கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்களும் நோட்டீசில் இடம் பெற்றுள்ளன.
உடுமலை:

இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந் தேதியை தேசிய வாக்காளர் தினமாக கடைபிடித்து வருகிறது.

வாக்காளர் பெயர் சேர்ப்பு விழிப்புணர்வு, தேர்தலில் ஜனநாயக கடமையாற்றும் பொறுப்பு, மாற்றுத்திறனாளி வாக்காளருக்கான சிறப்பு வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தேசிய வாக்காளர் தினத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் இளம் வாக்காளர்களை அழைத்து அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசு வழங்கி பாராட்டப்பட உள்ளது.

வருகிற 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்க உள்ள நிலையில், இந்திய தேர்தல் கமிஷன் புதிதாக வடிவமைத்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை வெளியிட்டுள்ளது. அதன்படி  வாக்காளர் பெயர் சேர்க்கவும், வாக்காளராக உள்ளவர் ஓட்டளிப்பதும் உரிமை மற்றும் கடமை என்று விளக்கியுள்ளது.

நோட்டீஸ்களில் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க, தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும்.  

கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் திருப்பூர் மாவட்டத்தில்  பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. 

Similar News