உள்ளூர் செய்திகள்
நல்ல பாம்பை கையில் பிடித்திருக்கும் வாலிபர்.

6 அடி நீள நல்ல பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞர்

Published On 2022-01-20 14:08 IST   |   Update On 2022-01-20 14:08:00 IST
உப்பளம் விளையாட்டு மைதானத்தில் சுற்றிய 6 அடி நீள நல்ல பாம்பை இளைஞர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
புதுச்சேரி:

புதுவை உப்பளம் விளையாட்டு மைதானத்தில் 20-ந் தேதி காலை சுமார் 6 அடி நீள நல்ல பாம்பு ஊர்ந்து சென்றது.

இதைக்கண்டு நடைபயிற்சி மற்றும் விளை யாட்டில் ஈடுபட்டவர்கள்  அஞ்சி ஓடினர்.  அப்போது அங்கு நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த குயவர் பாளையத்தை சேர்ந்த சுனில் என்பவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வருவதற்கு காத்திருந்த நிலையில், பாம்பு புதருக்குள் செல்ல முயன்றது. இதைக்கண்ட இளைஞர் சுனில் அந்த நல்லபாம்பை விரட்டிப்பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தார். 

பாதுகாப்பான முறையில் பாம்பை பிடித்து வந்த வனத்துறையினரிடம் ஒப்படைத்த  இளைஞரை வனத் துறையினர் பாராட்டினர்.  வனத்துறை காப்பகத்தில் வைக்கப்படும் பாம்பு சில நாட்களுக்கு  பிறகு காட்டுப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Similar News